Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
பேச்சுவார்த்தையில் உடன்பாடு... டாஸ்மாக் ஊழியர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் திடீர் வாபஸ்!

பேச்சுவார்த்தையில் உடன்பாடு... டாஸ்மாக் ஊழியர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் திடீர் வாபஸ்!

மிழ்நாட்டில் டாஸ்மாக் ஊழியர்கள் அறிவித்திருந்த வேலைநிறுத்தப் போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளதால், மதுபானக் கடைகள் வழக்கம் போல் இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

காலமுறை ஊதியம் வழங்குவது மற்றும் ஓய்வு வயதை 60 ஆக உயர்த்துவது உள்ளிட்ட பல்வேறு முக்கியக் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் பணியாளர் சங்கம் வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தது.

போராட்டம் இன்று தொடங்கவிருந்த நிலையில், சம்பந்தப்பட்ட துறை அமைச்சர் விக்னேஷ் அவர்களுடன் தொழிற்சங்க நிர்வாகிகளுக்கிடையே சுமூகமான பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இந்தப் பேச்சுவார்த்தையில் கோரிக்கைகள் குறித்து உடன்பாடு எட்டப்பட்டதைத் தொடர்ந்து, திட்டமிடப்பட்டிருந்த வேலைநிறுத்தப் போராட்டம் முழுமையாக வாபஸ் பெறப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, டாஸ்மாக் கடைகள் எப்போதும் போல வழக்கம்போல் இயங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Dinamaalai