Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
பேச்சுவார்த்தையில் உடன்பாடு... தவெக - காங்கிரஸ் சலசலப்புக்கு முற்றுப்புள்ளி!

பேச்சுவார்த்தையில் உடன்பாடு... தவெக - காங்கிரஸ் சலசலப்புக்கு முற்றுப்புள்ளி!

வெக மற்றும் காங்கிரஸ் கட்சித் தலைவர்களிடையே சமீபத்தில் நிலவி வந்த கருத்து மோதல்களுக்கு, முதலமைச்சர் விஜய்யுடன் நடைபெற்ற உயர் மட்டச் சந்திப்பின் மூலம் சுமுகமான தீர்வு காணப்பட்டுள்ளது.

2029 நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் வேட்பாளர் விவகாரம் தொடர்பாகத் தவெக மற்றும் காங்கிரசாருக்கு இடையே மோதல் போக்கு உருவானது. குறிப்பாக, ராகுல் காந்திதான் பிரதமர் என்றும், அதற்கு உடன்படாவிட்டால் அமைச்சரவையில் நீடிக்க மாட்டோம் என்றும் அமைச்சர் ராஜேஷ் குமார் பேசியது சலசலப்பை ஏற்படுத்தியது.

இந்த விவகாரத்திற்குத் தீர்வு காணும் வகையில், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் சிங்கம் மற்றும் யானை குறித்த குட்டிக்கதையைப் பகிர்ந்து சலசலப்பை முடிவுக்குக் கொண்டுவரும் முயற்சியை மேற்கொண்டார். இதற்கிடையே, சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் விஜய்யை, நாடாளுமன்ற நிலைக்குழு உறுப்பினர்களான மாணிக்கம் தாகூர் மற்றும் பிரவீன் சக்கரவர்த்தி ஆகியோர் தனியாகச் சந்தித்துப் பேசினர்.

கூட்டணியின் ஒற்றுமைக்குக் குந்தகம் விளைவிக்கும் வகையில் யாரும் சர்ச்சைக்குரிய கருத்துகளைப் பேச வேண்டாம் என்ற காங்கிரஸ் டெல்லி மேலிடத்தின் அறிவுறுத்தலை அவர்கள் விஜய்யிடம் விளக்கினர். அதனை ஏற்றுக்கொண்ட முதலமைச்சர் விஜய், கூட்டணி தொடர்பான வதந்திகளைத் தவிர்க்குமாறும் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்படுமாறும் கேட்டுக்கொண்டதாகக் காங்கிரஸ் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Dinamaalai