Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
"பெண்கள் வீட்டை விட்டு வெளியேற அனுமதிக்கக் கூடாது" - மதகுருவின் சர்ச்சை பேச்சு!

"பெண்கள் வீட்டை விட்டு வெளியேற அனுமதிக்கக் கூடாது" - மதகுருவின் சர்ச்சை பேச்சு!

கேரளாவின் கிராண்ட் முப்தி ஷேக் அபுபக்கர் அகமது, பெண்கள் பொதுவெளிக்கு வரக்கூடாது என்றும் வீடுகளுக்குள்ளேயே இருக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ள கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கொச்சியில் நடைபெற்ற இஸ்லாமிய மாநாட்டில் பேசிய காந்தபுரம் அபுபக்கர் முஸ்லியார் (ஷேக் அபுபக்கர் அகமது), பெண்கள் தங்கள் கண்ணியத்தைக் காக்கப் புர்கா அணிய வேண்டும் என்றும், பெண்களைப் பொதுவெளிக்குக் கொண்டு வருவது பெரும் அழிவுக்கு வழிவகுக்கும் என்றும் கூறினார்.

தங்க நெக்லஸ் பாதுகாப்பாகப் பெட்டிக்குள் இருந்தால் மட்டுமே அதன் அழகு கெடாமல் இருக்கும் என்பது போல, பெண்களும் பாதுகாப்பாக வீட்டிற்குள் தான் இருக்க வேண்டும் என்று அவர் தெரிவித்தார். இந்தக் கட்டுப்பாடுகள் பெண்களைக் குறைத்து மதிப்பிடுவதற்காக அல்ல, பாதுகாப்பதற்காகவே என்றும் வாதிட்டார்.

பெண்களை வீட்டுக்குள் முடக்கும் வகையிலும், அடிப்படை உரிமைகளுக்கு எதிரான வகையிலும் அமைந்துள்ள இந்தக் கருத்துக்குக் கேரளாவின் பல்வேறு அரசியல் கட்சிகளும் பெண்கள் அமைப்புகளும் கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளன.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Dinamaalai