Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
பெண்களுக்கு ரக்‌ஷாபந்தன் சிறப்பு பரிசு - லாட்லி பெஹ்னா யோஜனா மூலம் ரூ.1,750 வரவு வைப்பு!

பெண்களுக்கு ரக்‌ஷாபந்தன் சிறப்பு பரிசு - லாட்லி பெஹ்னா யோஜனா மூலம் ரூ.1,750 வரவு வைப்பு!

பெண்களின் நலனுக்காகச் செயல்படுத்தப்பட்டு வரும் லாட்லி பெஹ்னா யோஜனா திட்டத்தின் கீழ், ரக்ஷா பந்தன் பண்டிகையை முன்னிட்டு வழக்கமான தொகையுடன் சிறப்புப் பரிசும் சேர்த்து வழங்கப்படவுள்ளது.

மத்தியப் பிரதேச மாநிலத்தில் இத்திட்டத்தின் கீழ் பெண்களுக்கு வழக்கமாக வழங்கப்படும் மாதத் தவணைத் தொகையான ரூ. 1,500-னுடன், ரக்ஷா பந்தன் பரிசாக கூடுதலாக ரூ. 250 சேர்த்து வழங்கப்படவுள்ளது. மாநிலம் முழுவதும் உள்ள 1.25 கோடிக்கும் அதிகமான பெண்கள் இந்த நிதியுதவப் பெறுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மைஹார் மாவட்டத்தில் நடைபெற்ற மாநில அளவிலான நிகழ்ச்சியில் முதலமைச்சர் டாக்டர் மோகன் யாதவ் இந்தத் தொகையை வெளியிட, நேரடிப் பயன் பரிமாற்ற முறை மூலம் பெண்களின் வங்கிக் கணக்குகளில் மொத்தம் ரூ.1,750 வரவு வைக்கப்பட்டுள்ளது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Dinamaalai