Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
பூங்காவில் இளம்பெண்ணுக்கு பாலியல் துன்புறுத்தல்... கனடாவில் அத்துமீறிய இந்திய வம்சாவளி இளைஞர்!

பூங்காவில் இளம்பெண்ணுக்கு பாலியல் துன்புறுத்தல்... கனடாவில் அத்துமீறிய இந்திய வம்சாவளி இளைஞர்!

னடாவின் சர்ரே நகரில் உள்ள பூங்கா ஒன்றில் இளம்பெண்ணுக்குப் பாலியல் துன்புறுத்தல் அளித்ததாகக் கூறப்படும் வழக்கில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கனடாவின் பிராம்ப்டன் / சர்ரே பகுதியில் உள்ள புகழ்பெற்ற பியர் கிரீக் பூங்காவிற்கு நடைப்பயிற்சி வந்த இளம்பெண் ஒருவருக்கு அங்கு வந்த நபர் பாலியல் துன்புறுத்தல் அளித்துள்ளார். பாதிக்கப்பட்ட பெண் இதுகுறித்து உடனடியாக உள்ளூர் காவல்துறையிடம் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

முதற்கட்ட விசாரணையில் குற்றவாளியை அடையாளம் காண முடியாத சூழலில், பூங்காவில் இருந்த சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் சந்தேக நபரின் புகைப்படத்தை வெளியிட்டு, பொதுமக்கள் தகவல் தெரிவிக்குமாறு காவல்துறை கேட்டுக்கொண்டது.

பொதுமக்கள் அளித்த தகவலின் அடிப்படையில், பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட நபர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஜகேந்தர் குரானா என அடையாளம் காணப்பட்டு, அவரைக் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Dinamaalai