Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
"ப்ரெண்ட்ஸோட பானிபூரி சாப்பிடக்கூட முடியல" - நடிகை கவுரி கிஷன் ஆதங்கம்!

"ப்ரெண்ட்ஸோட பானிபூரி சாப்பிடக்கூட முடியல" - நடிகை கவுரி கிஷன் ஆதங்கம்!

'96' படத்தின் மூலம் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்த நடிகை கவுரி கிஷன், தனக்குக் கிடைத்த புகழால் ஏற்பட்ட மகிழ்ச்சியையும், அதே நேரத்தில் தான் இழந்த தனிப்பட்ட சுதந்திரம் குறித்தும் வெளிப்படையாகப் பகிர்ந்துள்ளார்.

விஜய் சேதுபதி மற்றும் திரிஷா நடிப்பில் வெளியான '96' படத்தில் இளம் வயது ஜானு கதாபாத்திரத்தில் நடித்து அனைவரின் அன்பைப் பெற்ற அவர், ரசிகர்கள் தன் மீது காட்டும் பாசத்தைத் தனது வாழ்நாளில் கிடைத்த பெரும் பாக்கியமாகக் கருதுவதாகத் தெரிவித்துள்ளார். தான் எப்போதுமே புகழை விரும்பியதில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நடிகையான பிறகு தனது தனிப்பட்ட வாழ்க்கை மாறிவிட்டதாகக் கூறியுள்ள கவுரி கிஷன், "நண்பர்களுடன் வெளியே சென்று ஜாலியாகப் பானிபூரி சாப்பிட வேண்டும் என்று ஆசைப்பட்டாலும், முன்புபோலச் சுதந்திரமாகச் செல்ல முடிவதில்லை," என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

தான் நிஜ வாழ்க்கையில் மிகவும் நிதானமானவள் என்றும், நண்பர்களுடன் நேரத்தைச் செலவிடுவதையே அதிகம் விரும்புவதாகவும் அவர் கூறியுள்ளார். இவரது இந்தப் பேட்டி தற்போது சமூக வலைதளங்களில் பலராலும் பகிரப்பட்டு வருகிறது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Dinamaalai