Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
புதுக்கோட்டையில் மாணவிகளை கீழே தள்ளிவிட்ட விவகாரம்... பேருந்தின் ஓட்டுநர், நடத்துநர் சஸ்பெண்ட்!

புதுக்கோட்டையில் மாணவிகளை கீழே தள்ளிவிட்ட விவகாரம்... பேருந்தின் ஓட்டுநர், நடத்துநர் சஸ்பெண்ட்!

புதுக்கோட்டையில் அரசு பேருந்தில் ஏற முயன்ற 10 பழங்குடியின மாணவிகளை பேருந்தின் நடத்துநர், பேருந்தில் ஏற்ற மறுத்து, பேருந்தில் கூட்டம் அதிகமாக இருப்பதாக கூறி பேருந்தின் கதவைத் திறந்து மாணவிகளை கீழே தள்ளிவிட்டதாகக் கூறப்படுகிறது.

இந்தச் சம்பவத்தைக் கண்டித்து அப்பகுதி பொதுமக்கள் மற்றும் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். படியில் நின்று கொண்டிருந்த மாணவிகள் நிலைதடுமாறி கீழே விழுந்து காயமடைந்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

பேருந்தின் படியில் பயணம் செய்த மாணவிகள் கீழே தள்ளிவிடப்பட்டதால் அவர்களுக்கு உடலில் பல்வேறு இடங்களில் காயங்கள் ஏற்பட்டன. உடனடியாக அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பொதுமக்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொள்ளாமல் நடந்து கொண்ட அரசுப் பணியாளர்களின் இந்தச் செயல் அனைவரையும் அதிர்ச்சியடையச் செய்தது. பாதிக்கப்பட்ட மாணவிகளுக்கு உரிய நீதி வழங்க வேண்டும் எனப் பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்தனர்.

இதனைத் தொடர்ந்து பொதுமக்களின் போராட்டத்தைத் தொடர்ந்து அதிகாரிகள் உடனடியாக விசாரணையை மேற்கொண்டனர். இந்தச் சம்பவத்திற்குக் காரணமான பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநர் ஆகிய இருவரையும் துறை ரீதியாக சஸ்பெண்ட் செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்களிடம் முறையற்ற விதத்தில் நடந்து கொள்ளும் ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Dinamaalai