Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
CM ஆனதும் வீடு மாறும் விஜய்? நிர்வாக வசதிக்காக அதிரடி முடிவு!

CM ஆனதும் வீடு மாறும் விஜய்? நிர்வாக வசதிக்காக அதிரடி முடிவு!

மிழக சட்டமன்றத் தேர்தலில் 108 இடங்களை வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள தவெக, விரைவில் ஆட்சிக் கட்டிலில் அமரவுள்ளது.

இந்நிலையில், முதல்வராகப் பொறுப்பேற்கவுள்ள விஜய் தனது வசிப்பிடத்தை மாற்ற வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

தற்போது விஜய் சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள பனையூர் இல்லத்தில் வசித்து வருகிறார். அங்கிருந்து தலைமைச் செயலகம் (St. George Fort) செல்வதற்குப் போக்குவரத்து நெரிசல் மிகுந்த நேரங்களில் சுமார் ஒன்றரை மணி நேரத்திற்கும் மேலாகச் செலவிட வேண்டியுள்ளது. முதல்வராகப் பொறுப்பேற்ற பிறகு, நாள்தோறும் பலமுறை தலைமைச் செயலகம் செல்வதற்கும், அவசரக் கூட்டங்களில் பங்கேற்பதற்கும் இந்தத் தூரம் தடையாக இருக்கும் எனக் கருதப்படுகிறது.

காலத்தின் முக்கியத்துவத்தைக் கருதி, சென்னை நகருக்குள் தங்குவதற்கு விஜய் திட்டமிட்டுள்ளார். இதற்காக பட்டினப்பாக்கம் அல்லது அடையாறு என இரண்டு பகுதிகளில் ஏதேனும் ஒன்றில் உள்ள தனது சொந்த வீட்டில் குடியேற விஜய் ஆலோசித்து வருவதாகக் கூறப்படுகிறது. இங்கிருந்து தலைமைச் செயலகம் செல்வது மிகவும் எளிதானது.

பொதுவாகத் தமிழக முதல்வர்கள் பசுமைவழிச் சாலையில் உள்ள அரசு பங்களாக்களில் வசிப்பதில்லை; மாறாகத் தங்களது சொந்த இல்லங்களையே பயன்படுத்தி வந்துள்ளனர். அந்த வகையில் விஜய்யும் தனது நகருக்குள் இருக்கும் இல்லத்தையே பயன்படுத்துவார் எனத் தெரிகிறது.

முதல்வராகப் பொறுப்பேற்க உள்ளதால், விஜய்க்கு 'Z+' பிரிவு பாதுகாப்பு வழங்கப்படும். அவர் நகருக்குள் குடியேறும்போது, அந்த இல்லத்தைச் சுற்றிலும் பலத்த பாதுகாப்பு மற்றும் போக்குவரத்துச் சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்படும். பனையூர் இல்லம் கட்சியின் முக்கிய ஆலோசனைகளுக்கும், தொண்டர்களைச் சந்திப்பதற்கும் பயன்படுத்தப்படலாம் எனத் தவெக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Dinamaalai