Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
ஈரானின் லாரக் தீவு மீது அமெரிக்க ராணுவம் திடீர் ஏவுகணைத் தாக்குதல்: கடும் பதிலடி கொடுக்கப்படும் என ஈரான் எச்சரிக்கை!

ஈரானின் லாரக் தீவு மீது அமெரிக்க ராணுவம் திடீர் ஏவுகணைத் தாக்குதல்: கடும் பதிலடி கொடுக்கப்படும் என ஈரான் எச்சரிக்கை!

ஹார்முஸ் ஜலசந்தி அருகே அமைந்துள்ள ஈரானின் முக்கியத் தீவான லாரக் மீது அமெரிக்க ராணுவம் திடீர் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ள சம்பவம் மத்திய கிழக்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

லாரக் தீவில் அமைக்கப்பட்டிருந்த ஈரானின் 2 முக்கிய ஏவுகணை ஏவுதளங்களைக் இலக்கு வைத்து அமெரிக்க ராணுவம் நடத்திய தாக்குதலில் அவை முற்றிலுமாக அழிக்கப்பட்டுள்ளன.

சர்வதேசக் கடல் வழியான ஹார்முஸ் ஜலசந்திப் பகுதியில் கண்ணிவெடிகளைப் பதிக்க ஈரான் தீவிர முயற்சி மேற்கொண்டதால், பாதுகாப்பைக் கருதி இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அமெரிக்கா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஏவுகணைத் தாக்குதலை உறுதிப்படுத்தியுள்ள ஈரான் அரசு, இதில் தங்களது வீரர்கள் மற்றும் பொதுமக்கள் உயிரிழந்துள்ளதாகத் தெரிவித்துள்ளது. மேலும், அமெரிக்காவின் இந்தத் தாக்குதலுக்குக் கண்டிப்பான "பதிலும் தண்டனையும்" விரைவிலேயே வழங்கப்படும் என எச்சரித்துள்ளது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Dinamaalai