Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
இன்றைய முதல்வர், நாளைய பிரதமர்... மாவட்டம் முழுவதும் வைரலாகும் போஸ்டர்!

இன்றைய முதல்வர், நாளைய பிரதமர்... மாவட்டம் முழுவதும் வைரலாகும் போஸ்டர்!

மிழகத்தில் பிரதமர் வேட்பாளராக விஜய்யை முன்னிறுத்தி தூத்துக்குடியில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தவெகவினர் சார்பில் ஒட்டப்பட்டுள்ள இந்த போஸ்டர்கள் பொதுமக்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளன. கட்சியின் வளர்ச்சிப் பணிகளைத் தாண்டி தேசிய அளவில் விஜய்யை முன்னிறுத்தும் இந்த நடவடிக்கைகள் அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை உருவாக்கியுள்ளன.

அந்தப் போஸ்டர்களில் 'நல்லாட்சி நாயகர், இன்றைய முதல்வர் நாளைய பிரதமர் C.ஜோசப் விஜய்' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. சமீபத்தில் தேசிய ஊடகம் ஒன்றின் கணிப்பில் விஜய் பிரதமர் பதவிக்கு 9 சதவிகிதம் தகுதியானவர் எனத் தெரிவிக்கப்பட்டது இங்கு குறிப்பிடத்தக்கது ஆகும். தவெகவினரின் இந்த அதிரடிப் போஸ்டர் பிரச்சாரம் அப்பகுதியில் மிகுந்த பரபரப்பை உருவாக்கியுள்ளது.

தமிழக அரசியலில் புதிய திருப்பங்களை ஏற்படுத்தும் வகையில் தவெகவினரின் இந்தச் செயல்கள் பார்க்கப்பட்டு வருகின்றன. தொடர்ந்து இது போன்ற பல்வேறு புதிய முன்னெடுப்புகளைச் செய்யத் கட்சியினர் திட்டமிட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது ஆகும். தற்போதைய இந்த போஸ்டர் விவகாரம் அப்பகுதி முழுவதும் பேசுபொருளாக மாறியுள்ளது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Dinamaalai