Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
ஜெம் கிரானைட் அதிபர் வீரமணி மீது 5-வது போக்சோ வழக்குப்பதிவு!

ஜெம் கிரானைட் அதிபர் வீரமணி மீது 5-வது போக்சோ வழக்குப்பதிவு!

ஜெம் கிரானைட் நிறுவனத்தின் அதிபர் வீரமணி மீது சிறுமிக்குப் பாலியல் தொல்லை அளித்த புகாரின் பேரில் மேலும் ஒரு போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதன் மூலம் அவர் மீது பதிவான மொத்த போக்சோ வழக்குகளின் எண்ணிக்கை ஐந்தாக உயர்ந்துள்ளது.

சென்னையைச் சேர்ந்த பெண் ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளனர். தான் ஏழு ஆண்டுகளுக்கு முன்பு சிறுமியாக இருந்தபோது, வீரமணி தனக்குப் பாலியல் வன்கொடுமை இழைத்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

வாட்ஸ்அப் மற்றும் நேரடி வாயிலாகப் பல்வேறு புகார்கள் தொடர்ச்சியாக வந்து கொண்டிருப்பதால், வீரமணி மீதான சட்டரீடியான சிக்கல்கள் மேலும் தீவிரமடைந்துள்ளதாகக் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Dinamaalai