Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
கறிக்குழம்பு சமைக்காததால் மனைையைக் கத்தியால் குத்திக் கொன்ற கணவன்!

கறிக்குழம்பு சமைக்காததால் மனைையைக் கத்தியால் குத்திக் கொன்ற கணவன்!

கேரள மாநிலம் மலப்புரத்தில், கணவர் கூறியபடி கறிக்குழம்பு சமைக்கவில்லை என்ற ஆத்திரத்தில் மனைதியைக் கத்தியால் குத்திக் கொலை செய்த கணவனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

மலப்புரம் மாவட்டம் வண்டூர் அடுத்த பாரசேரி பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி ரஷீத் (44), வேலைக்குச் செல்லும் முன் தன் மனைவி பசிலாவிடம் (38) கறிக்குழம்பு சமைத்து வைக்குமாறு கூறியுள்ளார். மதிய உணவுக்காக வீடு திரும்பியபோது கறிக்குழம்பு சமைக்கப்படவில்லை என்பதால் இருவருக்கும் இடையே கடும் தகராறு ஏற்பட்டுள்ளது.

ஆத்திரத்தின் உச்சத்திற்குச் சென்ற ரஷீத், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் பசிலாவைச் சரமாரியாகக் குத்தியுள்ளார். இதில் படுகாயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டுத் தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி பசிலா பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த வண்டூர் காவல்துறையினர், ரஷீத்தைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ரஷீத் மது அருந்திவிட்டு வந்து அடிக்கடி மனைவியுடன் தகராறு செய்யும் வழக்கம் உடையவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Dinamaalai