Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
கத்தி முனையில் ரூ.19 லட்சம் வழிப்பறி கொள்ளை... நெல்லையில் பதுங்கியிருந்த 7 பேர் துப்பாக்கி முனையில் கைது!

கத்தி முனையில் ரூ.19 லட்சம் வழிப்பறி கொள்ளை... நெல்லையில் பதுங்கியிருந்த 7 பேர் துப்பாக்கி முனையில் கைது!

சென்னை பாடியில் பட்டப்பகலில் துணிச்சலாகக் கத்தி முனையில் ரூ.19 லட்சம் பணம் வழிப்பறி செய்யப்பட்ட வழக்கில், திருநெல்வேலியில் பதுங்கியிருந்த 7 பேரைக் தனிப்படைப் காவல்துறையினர் துப்பாக்கி முனையில் வளைத்துப் பிடித்துக் கைது செய்துள்ளனர்.

சென்னை பாடி பகுதியில் நடந்த இந்த துணிகர வழிப்பறி சம்பவத்தைத் தொடர்ந்து, குற்றவாளிகளைக் பிடிக்கத் தனிப்படை அமைக்கப்பட்டது. சம்பவம் நடந்த பகுதிகள் மற்றும் அதனைச் சுற்றியுள்ள இடங்களில் அமைக்கப்பட்டிருந்த 100-க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையின் அடிப்படையில் குற்றவாளிகள் திருநெல்வேலியில் பதுங்கியிருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து அங்கு விரைந்த தனிப்படை போலீசார், துப்பாக்கி முனையில் 7 பேரையும் அதிரடியாகக் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட நபர்களிடமிருந்து ரூ.7.5 லட்சம் ரொக்கப் பணத்தைக் காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். மீதிப் பணம் மற்றும் இந்த வழிப்பறியில் வேறு யாருக்கெல்லாம் தொடர்பு இருக்கிறது என்பது குறித்துக் கைதான 7 பேரிடமும் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Dinamaalai