Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
கேரளத்தில் 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்: 5 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை!

கேரளத்தில் 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்: 5 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை!

கேரளத்தில் இன்று 9 மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. வடகிழக்குப் பருவமழை தொடங்கியுள்ள நிலையில், தமிழ்நாடு, கேரளம் உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.

வரும் நாட்களிலும் தமிழ்நாடு, கேரளத்தில் கனமழை தொடர வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா, கோட்டயம், இடுக்கி, கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர், காசர்கோடு ஆகிய மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. ஆலப்புழா, எர்ணாகுளம், திருச்சூர், பாலக்காடு, மலப்புரம் ஆகிய 5 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர் மழையால் தாழ்வான பகுதிகளில் வெள்ளப்பெருக்கும், மலைப்பகுதிகளில் நிலச்சரிவும் ஏற்பட வாய்ப்புள்ளதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Dinamaalai