Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
கிருஷ்ண ஜெயந்தி மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் சிறப்பு பேருந்துகள் !

கிருஷ்ண ஜெயந்தி மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் சிறப்பு பேருந்துகள் !

கிருஷ்ண ஜெயந்தி மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டுத் தமிழ்நாடு முழுவதும் கூடுதலாகச் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, சென்னையிலிருந்து இதர இடங்களுக்கும் மற்றும் பிற இடங்களிலிருந்தும் கூடுதலான பயணிகள் பயணம் மேற்கொள்வார்கள் என்பதைக் கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.

இதன் ஒரு பகுதியாகச் சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து பல்வேறு ஊர்களுக்கு முறையே இன்று 910 பேருந்துகளும், நாளை 740 பேருந்துகளும், சனிக்கிழமை 880 பேருந்துகளும் இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், கோயம்பேடு மற்றும் மாதவரம் பேருந்து நிலையங்களிலிருந்தும் பெங்களூரு, திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் போன்ற முக்கிய இடங்களுக்கும் ஏராளமான சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.

ஞாயிற்றுக்கிழன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூரு திரும்ப வசதியாகப் பயணிகளின் தேவைக்கேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் 805 சிறப்புப் பேருந்துகள் இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளன. கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் பொருட்டுப் பயணிகள் இணையதளம் அல்லது செயலி மூலமாக முன்கூட்டியே முன்பதிவு செய்து பயணிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Dinamaalai