Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
கோவையில் இளம்பெண்ணிடம் தகராறு செய்த தவெக நிர்வாகி கட்சியில் இருந்து நிரந்தர நீக்கம்!

கோவையில் இளம்பெண்ணிடம் தகராறு செய்த தவெக நிர்வாகி கட்சியில் இருந்து நிரந்தர நீக்கம்!

கோவையில் ஷோரூமில் நுழைந்து பெண்ணிடம் தகராறு செய்த தவெக வேடப்பட்டி நகரச் செயலாளர் பிரகாஷைக் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் நிரந்தரமாக நீக்குவதாக அக்கட்சி அறிவித்துள்ளது.

கோவை தொண்டாமுத்தூர் அருகே உள்ள இருசக்கர வாகன ஷோரூம் ஒன்றில் நுழைந்த வேடப்பட்டி பேரூராட்சி நகரச் செயலாளர் பிரகாஷ், அங்கிருந்த இருசக்கர வாகனத்தை எடுத்துச் செல்ல முயன்றதுடன், அங்கிருந்த பெண்ணிடம் தகராறிலும் ஈடுபட்டுள்ளார்.

தனது கணவர் இல்லாத நேரத்தில் ஷோரூமிற்குள் அத்துமீறி நுழைந்து பிரகாஷ் தகராறு செய்ததாகப் பாதிக்கப்பட்ட பெண்ணும் வீடியோ பதிவுகளை வெளியிட்டிருந்தார். இந்தக் காணொலி கடந்த நவம்பர் 15-ஆம் தேதி இணையத்திலும் ஊடகங்களிலும் வெளியாகிப் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இச்சம்பவம் கட்சியின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் வகையில் அமைந்ததைத் தொடர்ந்து, கோவை மாவட்டச் செயலாளர் ராஜ்குமார் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில்:

கழகத்தின் கொள்கைகள், குறிக்கோள்கள் மற்றும் கோட்பாடுகளுக்கு முரணான வகையிலும், கட்சியின் கண்ணியத்திற்குக் களங்கம் விளைவிக்கும் வகையிலும் செயல்பட்டுள்ளதால், ஒழுங்கு மற்றும் கட்டுப்பாட்டைப் பேணும் நோக்கில் பிரகாஷ் வகித்து வந்த அனைத்துக் கழகப் பொறுப்புகளிலிருந்தும், அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்தும் 15.11.2026 முதல் நிரந்தரமாக நீக்கப்படுகிறார்.

கழக உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகள் யாரும் அவருடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக் கொள்ள வேண்டாம் எனவும் அந்த அறிக்கையில் திட்டவட்டமாக அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Dinamaalai