Dailyhunt
குடிமகன்களுக்கு 'ஷாக்': கேரளா தேர்தல் எதிரொலி... கன்னியாகுமரி உட்பட 5 மாவட்டங்களில் டாஸ்மாக் மூடல்!

குடிமகன்களுக்கு 'ஷாக்': கேரளா தேர்தல் எதிரொலி... கன்னியாகுமரி உட்பட 5 மாவட்டங்களில் டாஸ்மாக் மூடல்!

கேரளாவில் வரும் ஏப்ரல் 9-ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு, தமிழக - கேரள எல்லைப் பகுதிகளில் உள்ள மதுக்கடைகளை மூட மாவட்ட நிர்வாகங்கள் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளன.

குறிப்பாக, கன்னியாகுமரி மாவட்டத்தின் எல்லைப் பகுதிகளில் அமைந்துள்ள அனைத்து டாஸ்மாக் கடைகள் மற்றும் தனியார் மதுபானக் கூடங்கள் தேர்தல் நாளன்று செயல்படாது என மாவட்ட ஆட்சியர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

அண்டை மாநிலத் தேர்தலின் போது மதுபானங்கள் கடத்தப்படுவதைத் தவிர்க்கவும், சட்டம் ஒழுங்கைப் பராமரிக்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மட்டுமல்லாது, கேரளாவை எல்லையாகக் கொண்டுள்ள தென்காசி, தேனி, கோவை மற்றும் நீலகிரி ஆகிய மாவட்டங்களிலும் இரு மாநிலச் சந்திப்புகள் உள்ள பகுதிகளில் செயல்படும் டாஸ்மாக் கடைகள் மூடப்பட உள்ளன.

தேர்தல் நடைபெறும் தினமான ஏப்ரல் 9-ஆம் தேதி காலை முதல் மாலை வரை இந்தத் தடை அமலில் இருக்கும் எனத் தெரிகிறது. இதனால் எல்லைக் கிராமங்களில் உள்ள மதுப்பிரியர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர். அசம்பாவிதங்களைத் தவிர்க்க எல்லைப் பகுதிகளில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு, தீவிரக் கண்காணிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் எல்லை மாவட்டங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Dinamaalai