Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
குஷியில் மாணவர்கள்... 3 நாட்கள் பள்ளி, கல்லூரிகளுக்குத் தொடர் விடுமுறை!

குஷியில் மாணவர்கள்... 3 நாட்கள் பள்ளி, கல்லூரிகளுக்குத் தொடர் விடுமுறை!

மிழகம் முழுவதும் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று முதல் மூன்று நாட்கள் தொடர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது மாணவர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இன்று செப்டம்பர் 4-ம் தேதி வெள்ளிக்கிழமை கிருஷ்ண ஜெயந்தி பண்டிகையை முன்னிட்டு அரசு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து நாளை செப்டம்பர் 5-ம் தேதி சனிக்கிழமை மற்றும் செப்டம்பர் 6-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை என வழக்கமான வார இறுதி விடுமுறை நாட்கள் வருவதால், வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு எனத் தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை உறுதியாகியுள்ளது.

தொடர்ந்து மூன்று நாட்கள் விடுமுறை கிடைப்பதால் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் பலரும் குடும்பத்துடன் சொந்த ஊர் நோக்கி நேற்று மாலையில் இருந்தே பயணப்படத் துவங்கிவிட்டனர். வார இறுதி விடுமுறையுடன் சேர்த்து தொடர் விடுமுறை என்பதால் நேற்று இரவு முழுவதும் விடிய விடிய சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Dinamaalai