Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
மு.க.ஸ்டாலினும் நயினார் நாகேந்திரனும் திடீர் சந்திப்பு - ஆலங்குளம் எம்.எல்.ஏ திருமண விழாவில் சுவாரஸ்யம்!

மு.க.ஸ்டாலினும் நயினார் நாகேந்திரனும் திடீர் சந்திப்பு - ஆலங்குளம் எம்.எல்.ஏ திருமண விழாவில் சுவாரஸ்யம்!

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் தொகுதி திமுக எம்.எல்.ஏ மனோஜ் பாண்டியன் இல்லத் திருமண விழா சென்னை திருவான்மியூரில் மிகவும் பிரமாண்டமாக நடைபெற்றது.

இந்த விழாவில் திமுக தலைவரும் முக்கியப் பிரமுகர்களும் கலந்து கொண்டதுடன், அரசியல் தளங்களைத் தாண்டிய சந்திப்புகளும் இடம்பெற்றுள்ளன.

திமுக தலைவரும் பல்வேறு அரசியல் கட்சிகளின் முக்கியப் பிரமுகர்களும் இந்தத் திருமண விழாவில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர். இந்த நிகழ்வில் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனும் வருகை தந்திருந்தார். அப்போது திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும் நயினார் நாகேந்திரனும் நேரில் சந்தித்துக் கைகுலுக்கி ஒருவருக்கொருவர் நலம் விசாரித்துக்கொண்டனர்.

பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த முன்னணித் தலைவர்களும் கலந்துகொண்டதால் இந்தத் திருமணம் அரசியல் வட்டாரத்தில் கவனம் ஈர்க்கும் நிகழ்வாக மாறியது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Dinamaalai