Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ராஜினாமா... தமிழக அரசியலில் ஒரு சகாப்தம் முடிவு!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ராஜினாமா... தமிழக அரசியலில் ஒரு சகாப்தம் முடிவு!

மிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் ஆளுங்கட்சியான திமுக-விற்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ள நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

நேற்று (மே 4) வெளியான தேர்தல் முடிவுகளில், கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்ட அவர், தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் வி.எஸ். பாபுவிடம் 8,795 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். 1996-ல் ஜெயலலிதாவிற்குப் பிறகு, பதவியில் இருக்கும்போதே தேர்தலில் தோற்ற முதலமைச்சர் என்ற பெயரையும் அவர் பெற்றுள்ளார்.

தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து, மு.க.ஸ்டாலின் தனது ராஜினாமா கடிதத்தைத் தமிழகப் பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேக்கருக்கு முறைப்படி அனுப்பி வைத்தார். திமுக கூட்டணி 73 இடங்களை மட்டுமே பெற்றுள்ள நிலையில், விஜய் தலைமையிலான தவெக 108 இடங்களைப் பெற்றுத் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. இதனால், மக்களாட்சி மாண்பைக் காக்கும் வகையில் தார்மீகப் பொறுப்பேற்று அவர் தனது பதவியை விட்டு விலகியுள்ளார்.

ஸ்டாலினின் ராஜினாமாவைத் தொடர்ந்து, தமிழகத்தில் ஒரு புதிய அரசு அமைவதற்கான நடவடிக்கைகள் வேகம் பெற்றுள்ளன. புதிய முதலமைச்சர் பதவியேற்கும் வரை, அவர் இடைக்கால முதலமைச்சராகத் தொடருமாறு ஆளுநர் கேட்டுக்கொள்ள வாய்ப்புள்ளது. திராவிட அரசியலின் முக்கியத் தூணாக விளங்கிய ஸ்டாலினின் இந்த விலகல், தமிழக அரசியலில் ஒரு மிகப்பெரிய மாற்றத்தின் தொடக்கமாகக் கருதப்படுகிறது. தற்போது, திமுக-வின் அடுத்தகட்ட நகர்வுகள் மற்றும் எதிர்க்கட்சித் தலைவராக உதயநிதி ஸ்டாலின் தேர்வு செய்யப்படுவது குறித்த ஆலோசனைகள் தீவிரமடைந்துள்ளன.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Dinamaalai