Dailyhunt
முதல்வர் பதவியை ராஜினாமா செய்த பினராயி விஜயன் ... கேரளாவில் காங்கிரஸ் கூட்டணி மாபெரும் வெற்றி: !

முதல்வர் பதவியை ராஜினாமா செய்த பினராயி விஜயன் ... கேரளாவில் காங்கிரஸ் கூட்டணி மாபெரும் வெற்றி: !

கேரள மாநில சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் அம்மாநில அரசியலில் ஒரு மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளன.

கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த இடதுசாரி முன்னணியைத் தோற்கடித்து, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி (UDF) அமோக வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. இந்தத் தோல்வியைத் தொடர்ந்து, முதலமைச்சர் பினராயி விஜயன் தனது பதவியை முறைப்படி ராஜினாமா செய்துள்ளார்.

கேரளாவில் மொத்தம் உள்ள 140 சட்டமன்றத் தொகுதிகளில், காங்கிரஸ் கூட்டணி சுமார் 100 இடங்களைக் கைப்பற்றி அசைக்க முடியாத பெரும்பான்மையுடன் ஆட்சியை உறுதி செய்துள்ளது. இடதுசாரி முன்னணிக்கு இந்தத் தேர்தல் முடிவுகள் பெரும் பின்னடைவாகக் கருதப்படுகின்றன. கேரளாவின் நீண்டகால அரசியல் வரலாற்றில் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஆட்சி மாற்றம் ஏற்படும் என்ற மரபு, கடந்த தேர்தலில் உடைந்த நிலையில், இந்த முறை மீண்டும் அந்த மரபு நிலைநாட்டப்பட்டுள்ளது.

காங்கிரஸ் கட்சியின் இந்த எழுச்சி அம்மாநிலத் தொண்டர்களிடையே மாபெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. பினராயி விஜயன் தனது ராஜினாமா கடிதத்தை ஆளுநரிடம் வழங்கியதைத் தொடர்ந்து, காங்கிரஸ் தலைமையிலான புதிய அரசு அமைப்பதற்கான முதற்கட்ட பணிகள் விறுவிறுப்பாகத் தொடங்கியுள்ளன. கேரளாவின் அடுத்த முதலமைச்சர் யார் என்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் சில தினங்களில் காங்கிரஸ் மேலிடத்தால் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Dinamaalai