Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
நடிகையாக அறிமுகமாகும் இன்ஸ்டா பிரபலம் அமலா ஷாஜி ...நெகிழ்ச்சி!

நடிகையாக அறிமுகமாகும் இன்ஸ்டா பிரபலம் அமலா ஷாஜி ...நெகிழ்ச்சி!

விக்ரம் பிரபுவின் 26-வது திரைப்படத்தில் இன்ஸ்டாகிராம் பிரபலமான அமலா ஷாஜி நடிகையாக அறிமுகமாகிறார். நடிகர் விக்ரம் பிரபு நடிக்கும் இப்படத்தை அறிமுக இயக்குநர் சித்தார்த் இயக்குகிறார்.

ரோமியோ பிக்சர்ஸ் சார்பில் ராகுல் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.

தங்க மார்க்கெட் பின்னணியை மையமாகக் கொண்டு அதிரடி ஆக்‌ஷன் திரில்லர் படமாக இப்படம் உருவாகி வருகிறது. இதில் விக்ரம் பிரபுவுடன் சிவத்மிகா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் முதற்கட்ட பணிகள் சென்னையில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

இது குறித்து சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள அமலா ஷாஜி, தான் கனவாக மட்டுமே கண்ட ஒன்று தற்போது நனவாகியுள்ளதாகத் தெரிவித்துள்ளார். மேலும், தனது முதல் திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாவது மிகுந்த மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் அளிப்பதாக அவர் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Dinamaalai