Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
நாகர்கோவில் பெண் கொலையில் திருப்பம்.. 40 சவரன் நகைகளுக்காக அறிமுகமானவரே கொன்ற கொடூரம்!

நாகர்கோவில் பெண் கொலையில் திருப்பம்.. 40 சவரன் நகைகளுக்காக அறிமுகமானவரே கொன்ற கொடூரம்!

ன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலில் 40 சவரன் நகைகளுக்காக மூதாட்டியை அறிமுகமானவரே கொலை செய்த கொடூரம் அம்பலத்திற்கு வந்துள்ள நிலையில், மூதாட்டியுடன் பழக்கத்தில் இருந்த சகோதரர்கள் இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

நாகர்கோவிலில் மூதாட்டியைக் கொடூரமாகக் கொலை செய்து நகை மற்றும் பணத்தைக் கொள்ளையடித்த வழக்கில், வேல்ராஜ் மற்றும் அவரது சகோதரர் அரவிந்த் ஆகிய இருவரைத் தனிப்படை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கைதானவர்களில் ஒருவரான வேல்ராஜ் மூதாட்டிக்கு ஏற்கெனவே நன்கு அறிமுகமானவர் என்பதும், அடிக்கடி அவரது வீட்டிற்கு வந்து சென்றவர் என்பதும் காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.

இச்சம்பவத்தில் கொள்ளையடிக்கப்பட்ட மொத்தம் 40 சவரன் நகைகளில், தற்போது 30 சவரன் தங்க நகைகளும், 25,000 ரூபாய் ரொக்கமும் காவல்துறையினரால் மீட்கப்பட்டுள்ளது. இந்த கொலை மற்றும் கொள்ளைச் சம்பவம் தொடர்பாகக் கைது செய்யப்பட்டவர்களிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Dinamaalai