Dailyhunt
நாகர்கோவில் மேயர் ராஜினாமா... பெரும் பரபரப்பு !

நாகர்கோவில் மேயர் ராஜினாமா... பெரும் பரபரப்பு !

2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியின் அதிகாரப்பூர்வ வேட்பாளராக மகேஷ் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து அந்த பகுதியில் அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.

தேர்தல் விதிகளின்படி ஒரு பதவியில் இருக்கும் நபர் வேட்புமனு தாக்கல் செய்வதற்கு முன்னதாக தனது தற்போதைய பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்பது கட்டாயமாகும். இதனையொட்டி மகேஷ் தனது நாகர்கோவில் மேயர் பதவியை முறைப்படி ராஜினாமா செய்து அதற்கான கடிதத்தை மாநகராட்சி கமிஷனரிடம் நேரில் வழங்கினார்.

மகேஷின் ராஜினாமாவை தொடர்ந்து காலியான மேயர் இடத்திற்கு மாநகராட்சி சட்ட விதிமுறைகளின்படி தற்காலிக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதன்படி இதுவரை துணை மேயராக பணியாற்றி வந்த மேரி பிரின்சி லதா அவர்கள் நேற்று முதல் நாகர்கோவில் மாநகராட்சியின் பொறுப்பு மேயராக நியமிக்கப்பட்டு தனது பணிகளை துரிதமாக தொடங்கியுள்ளார். வேட்பாளர் அறிவிப்பு வெளியான சில மணி நேரங்களிலேயே மாநகராட்சி நிர்வாகத்தில் இந்த முக்கிய மாற்றம் அரங்கேறியது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதிய பொறுப்பு மேயராக நியமிக்கப்பட்ட மேரி பிரின்சி லதா அவர்கள் நாகர்கோவில் மாநகராட்சி அலுவலகத்தில் முறைப்படி கோப்புகளில் கையெழுத்திட்டு தனது பொறுப்புகளை ஏற்றுக்கொண்டார். இந்த முக்கிய நிகழ்வின் போது மாநகராட்சி உயர் அதிகாரிகள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் பலரும் உடனிருந்து அவருக்கு தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்தனர். சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மாநகராட்சி பணிகளில் தொய்வு ஏற்படாமல் இருக்க இந்த உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Dinamaalai