Dailyhunt
நாளை கொங்கு மண்டலத்தில் அண்ணாமலை சூறாவளிப் பயணம் - 5 தொகுதிகளில் வாக்கு சேகரிப்பு!

நாளை கொங்கு மண்டலத்தில் அண்ணாமலை சூறாவளிப் பயணம் - 5 தொகுதிகளில் வாக்கு சேகரிப்பு!

மிழக சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 23-ம் தேதி நடைபெற உள்ள நிலையில், பாஜக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக அண்ணாமலை தனது முதற்கட்டப் பிரசாரத்தைத் நாளை தொடங்குகிறார்.

இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை பாஜக தேர்தல் பணிக்குழு அமைப்பாளர் பொன். ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ளார்.அண்ணாமலை நாளை மாலை கொங்கு மண்டலத்தின் முக்கியத் தொகுதிகளில் தனது பரப்புரையைத் தொடங்குகிறார். பல்லடம், திருப்பூர் தெற்கு, திருப்பூர் வடக்கு, அவிநாசி மற்றும் சூலூர் ஆகிய இடங்களில் வாக்கு சேகரிக்கிறார். இந்த தொகுதிகளில் போட்டியிடும் பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்துப் பொதுமக்களிடம் அவர் நேரில் வாக்கு சேகரிக்கிறார்.

தனது பிரசாரப் பயணம் குறித்து அண்ணாமலை வெளியிட்டுள்ள பதிவில், "தமிழகத்தை மிக மோசமான நிலைக்குத் தள்ளியிருக்கும் மக்கள் விரோத திமுக ஆட்சியை அகற்றவும், நாட்டின் வளர்ச்சிக்காகவும், தமிழகத்தின் முன்னேற்றத்திற்காகவும் பொதுமக்கள் அனைவரும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு ஆதரவு அளிக்க வேண்டும்," எனத் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் திமுக, அதிமுக, நாம் தமிழர் மற்றும் தவெக என நான்கு முனைப் போட்டி நிலவும் சூழலில், அண்ணாமலையின் இந்தப் பிரசாரம் கொங்கு மண்டலத்தில் பாஜக கூட்டணியின் வாக்குகளை வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே முதல்வர் ஸ்டாலின், விஜய் போன்ற தலைவர்கள் தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், அண்ணாமலையின் வருகை தேர்தல் களத்தை மேலும் பரபரப்பாக்கியுள்ளது.

குறிப்பாக இன்று மாலை சூலூர் பகுதியில் திமுக அலுவலகத் திறப்பு விழாவின் போது விபத்து ஏற்பட்ட நிலையில், அதே சூலூர் தொகுதியில் நாளை அண்ணாமலை பிரசாரம் செய்ய உள்ளது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Dinamaalai