Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
நேபாள் பெருவெள்ளம் - பலி எண்ணிக்கை 1,000-ஐ தாண்டியது!

நேபாள் பெருவெள்ளம் - பலி எண்ணிக்கை 1,000-ஐ தாண்டியது!

நேபாளத்தில் இமயமலைப் பகுதியில் ஏற்பட்ட திடீர் பனிப்பாறை உடைவு மற்றும் பெருவெள்ளத்தால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,000-ஐக் கடந்துள்ளது.

இந்த கோர விபத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் மாயமாகியுள்ளதால் அங்கு மீட்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

திபெத் எல்லைக்குட்பட்ட இமயமலைப் பகுதியில் ஏற்பட்ட பனிப்பாறை உடைவு மற்றும் நிலச்சரிவு காரணமாக, போடேகோஷி (Trishuli) ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த ஆக்ரோஷமான வெள்ளம் கரைகளை உடைத்துக்கொண்டு பாய்ந்ததில் வடக்கு மற்றும் மத்திய மாவட்டங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன.

இதுவரை அதிகாரப்பூர்வத் தகவல்களின்படி 1,003 பேர் இந்த வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்துள்ளனர். மேலும், வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு மாயமான 4,000-க்கும் மேற்பட்டோரைத் தேடும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது.

பேரிடர் பகுதிகளில் சிக்கியிருந்த சுமார் 12,000 பேர் இதுவரை பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். நேபாளம் மற்றும் சீனாவுடன் இணைந்து இந்தியக் குழுவினரும் மீட்புப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Dinamaalai