Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
நேபாள வெள்ளத்தில் சிக்கிய 57 தமிழர்களை மீட்க நடவடிக்கை - மத்திய அரசுடன் தமிழக அரசு தீவிர ஆலோசனை!

நேபாள வெள்ளத்தில் சிக்கிய 57 தமிழர்களை மீட்க நடவடிக்கை - மத்திய அரசுடன் தமிழக அரசு தீவிர ஆலோசனை!

திபெத் எல்லைப் பகுதியில் அமைந்துள்ள நேபாளத்தில் திடீரென ஏற்பட்ட கோர வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு காரணமாகப் பல்வேறு உள்கட்டமைப்புகள் சேதமடைந்துள்ள நிலையில், அங்கு மீட்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

நேபாளத்தில் ஏற்பட்டுள்ள இந்தத் திடீர் வெள்ளப் பெருக்கில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 95 ஆக அதிகரித்துள்ளது. இப்பேரிடரில் நூற்றுக்கும் மேற்பட்ட இந்தியர்கள் உட்பட சுமார் 300-க்கும் மேற்பட்டோர் மாயமாகியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களில் 36 பெண்கள் உள்பட மொத்தம் 57 தமிழர்கள் நேபாளத்தின் ரசுவா பகுதியில் தவிப்பது தெரியவந்துள்ளது.

நேபாளத்தில் சிக்கியுள்ள தமிழர்களைப் பாதுகாப்பாக மீட்கும் நடவடிக்கைகளில் தமிழக அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இது குறித்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் மற்றும் நேபாளத்தில் உள்ள இந்தியத் தூதரக அதிகாரிகளுடன் தமிழக அரசு சார்பில் தொடர்ச்சியான ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சர் வினோத் தகவல் தெரிவித்துள்ளார்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Dinamaalai