Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
ஒரே நாளில் அதிரடியாகச் சரிந்த தங்கம் விலை... சவரனுக்கு ரூ.1,800 குறைந்து விற்பனை!

ஒரே நாளில் அதிரடியாகச் சரிந்த தங்கம் விலை... சவரனுக்கு ரூ.1,800 குறைந்து விற்பனை!

மிழ்நாட்டில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,800 சரிந்துள்ளது. நேற்று ஒரு கிராம் ரூ.14,175-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று கிராமுக்கு ரூ.225 சரிந்து, ஒரு கிராம் ரூ.13,950-க்கு விற்பனையாகிறது.

கடந்த வாரங்களில் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வந்த நிலையில், இந்த திடீர் விலை குறைவு நடுத்தர மக்களிடையே சற்று நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது. ஒரு சவரன் நேற்று ரூ.1,13,400-க்கு விற்கப்பட்ட நிலையில், இன்று ரூ.1,800 சரிந்து ரூ.1,11,600-க்கு விற்பனையாகிறது.

இதற்கிடையே வெள்ளியின் விலையைப் பொறுத்தவரை, ஒரு கிராம் வெள்ளி ரூ.250-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் ஒரு கிலோ வெள்ளி ரூ.2,50,000-க்கு விற்பனை செய்யப்படுவதாகச் சந்தை நிலவரங்கள் தெரிவிக்கின்றன. ஆபரணத் தங்கத்தின் விலை திடீரெனக் குறைந்துள்ளதால் நகைக்கடைகளில் வாடிக்கையாளர்களின் வருகை அதிகரிக்க வாய்ப்புள்ளது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Dinamaalai