Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
RIP வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் வைத்துவிட்டு குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தம்பதி தற்கொலை!

RIP வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் வைத்துவிட்டு குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தம்பதி தற்கொலை!

பிரவீன் ஆட்டோ ஓட்டி வந்த நிலையில், அவரது மனைவி காய்கறி வியாபாரம் செய்து வந்ததாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்கொலைக்கு முன்பு கணவன், மனைவி இருவரும் தங்களது வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில் 'ஆர்.ஐ.பி' என பதிவிட்டுள்ளனர். இதைப் பார்த்த உறவினர் ஒருவர், உடனடியாக அந்தப் பெண்ணின் குடும்பத்தினருக்குத் தகவல் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே, தம்பதியினர் முதலில் தங்களது இரண்டு குழந்தைகளுக்கும் விஷம் கொடுத்துவிட்டு, பின்னர் தற்கொலை செய்து கொண்டதாக முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. நால்வரின் உடல்களையும் கைப்பற்றியுள்ள போலீசார், சம்பவம் தொடர்பான தகவல்களைச் சேகரித்து வருகின்றனர்.

இந்தக் குடும்பத்தினர் இத்தகைய விபரீத முடிவை எடுத்ததற்கான காரணம் தற்பொழுது வரை தெரியவராத நிலையில், குடும்பப் பிரச்சினையா அல்லது கடன் உள்ளிட்ட வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்துப் போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். குடும்பத் தற்கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், கிடைத்துள்ள ஆதாரங்கள் மற்றும் உறவினர்களிடம் நடத்தப்படும் விசாரணையின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Dinamaalai