Dailyhunt
சவரனுக்கு ரூ.1,040 சரிவு... தங்கம் விலை திடீர் வீழ்ச்சி... !

சவரனுக்கு ரூ.1,040 சரிவு... தங்கம் விலை திடீர் வீழ்ச்சி... !

ங்கம் விலை கடந்த சில நாட்களாக விண்ணைத் தொட்டு வந்த நிலையில், இன்று காலை ஆபரணத் தங்கத்தின் விலை அதிரடியாகக் குறைந்து நடுத்தர வர்க்கத்தினருக்கு நிம்மதியை அளித்துள்ளது.

இன்று ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.1,040 குறைந்து ரூ.1,10,880-க்கு விற்பனையாகிறது. அதேபோல், ஒரு கிராம் தங்கம் ரூ.130 சரிந்து ரூ.13,860-க்கு விற்பனை செய்யப்படுவதால், நகைக்கடைகளில் வாடிக்கையாளர்கள் கூட்டம் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

நேற்றைய தினம் தங்கம் விலையில் பெரும் ஊசலாட்டம் நிலவிய நிலையில், இன்று காலை முதல் விலை மீண்டும் சரிவுப் பாதையை நோக்கிச் சென்றுள்ளது. சர்வதேச சந்தையில் நிலவும் மாற்றங்கள் மற்றும் அமெரிக்க டாலர் மதிப்பு வலுவடைந்து வருவது போன்ற காரணங்களால் இந்த விலை வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாகப் பொருளாதார வல்லுநர்கள் கணித்துள்ளனர். தங்கத்தைப் போலவே வெள்ளியின் விலையும் இன்று கிராமுக்கு ரூ.5 குறைந்து ரூ.255-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

பிப்ரவரி மாதம் திருமண விசேஷங்கள் அதிகம் நடைபெறும் காலம் என்பதால், இந்த திடீர் விலை குறைவு இல்லத்தரசிகள் மற்றும் முதலீட்டாளர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக அமைந்துள்ளது. கடந்த சில வாரங்களாக ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்ட தங்கத்தின் விலை, தற்போது கணிசமாகக் குறைந்துள்ளதை மக்கள் சாதகமாகப் பார்க்கின்றனர். இருப்பினும், சர்வதேச சூழலுக்கு ஏற்ப விலையில் தினசரி மாற்றங்கள் இருக்கும் என்பதால், வாடிக்கையாளர்கள் அவ்வப்போது நிலவரத்தை அறிந்து கொள்வது நல்லது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Dinamaalai