Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
செப்டம்பரில் இந்த 5 ராசிகாரர்களுக்கு ஜாக்பாட்... புதனின் இரட்டைப் பெயர்ச்சியால் அதிர்ஷ்ட வாய்ப்புகள்!

செப்டம்பரில் இந்த 5 ராசிகாரர்களுக்கு ஜாக்பாட்... புதனின் இரட்டைப் பெயர்ச்சியால் அதிர்ஷ்ட வாய்ப்புகள்!

றிவு, பேச்சுத்திறன், வியாபாரம், நிதிநிலைக்கான காரணியாகக் கருதப்படுபவர் புதன் பகவான். இந்த மாதத்தில் புதனின் இரட்டைப் பெயர்ச்சியால் 5 ராசியினருக்குப் பணவரவு, தொழில் வளர்ச்சி மற்றும் புதிய வாய்ப்புகள் கைகூடி வரவுள்ளன.

வியாபாரம் தொடர்பான முடிவுகளைத் தெளிவாக எடுக்கும் திறன் அதிகரிக்கும். புதிய முதலீடுகளுக்குச் சாதகமான வாய்ப்புகளும், எதிர்பாராத வழிகளில் பணவரவும் உண்டாகும். பேச்சுத்திறன் மேம்படுவதால் முக்கிய நபர்களின் ஆதரவு எளிதில் கிடைக்கும். செப்டம்பர் மாதத்தில் புதன் பகவான் இருமுறை ராசி மாறி பெயர்ச்சியாகிறார். செப்டம்பர் 7 ம் தேதி கன்னி ராசிக்குச் செல்லும் புதன் பகவான், அங்கிருந்து செப்டம்பர் 26 ம் தேதி துலாம் ராசிக்குப் பெயர்ச்சியாகிறார்.

சிம்மம்:

வருமானத்தைப் பெருக்குவதற்கான புதிய வாய்ப்புகள் தேடி வரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்குப் பதவி உயர்வு, ஊதிய உயர்வு அல்லது விரும்பிய இடமாற்றம் கிடைக்கக் கூடும். திட்டமிட்ட செயல்பாடுகள் மூலம் வியாபாரத்தை வெற்றிகரமாக விரிவுபடுத்தலாம்.

துலாம்:

பேச்சுத்திறன் மற்றும் பணித்திறன் சிறந்து விளங்குவதால் சிக்கலான காரியங்களையும் சுலபமாக முடிப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியும், திருமண வாழ்க்கையில் நல்ல புரிதலும் நிலவும். புதிய வீடு அல்லது வாகனம் வாங்கும் முயற்சிகள் கைகூடும்.

விருச்சிகம்:

ஒன்றுக்கும் மேற்பட்ட வழிகளில் வருமானம் அதிகரித்து நிதிநிலை வலுவடையும். தொழில் முனைவோருக்கு எதிர்பாராத லாபமும், பழைய முதலீடுகளில் இருந்து நல்ல பலன்களும் கிடைக்கும். போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்கும், வெளிநாட்டுத் தொடர்புடைய தொழில் செய்பவர்களுக்கும் இது பொற்காலமாக அமையும்.

மகரம்:

புதிய வேலை தேடுபவர்களுக்குச் சிறந்த வாய்ப்புகள் அமையும். பணியிடத்தில் நீண்ட நாட்களாக எதிர்பார்த்த சம்பள உயர்வு, பதவி உயர்வு மற்றும் கூடுதல் பொறுப்புகள் கிடைக்கும். வியாபாரத்தில் புதிய வழிகளில் வருமானம் உயர்ந்து பொருளாதார நிலை படிப்படியாகச் சீராகும்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Dinamaalai