Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
சி.எம்.ஐ. படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கை அறிவிப்பு - நுழைவுத் தேர்வில் விலக்கு பெறும் வாய்ப்பு!

சி.எம்.ஐ. படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கை அறிவிப்பு - நுழைவுத் தேர்வில் விலக்கு பெறும் வாய்ப்பு!

பிரபலமான சி.எம்.ஐ. கல்வி நிறுவனத்தில் பல்வேறு அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில் சில சிறப்புக் தகுதிகள் உள்ள மாணவர்களுக்கு நுழைவுத் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.

கணிதம், கணினி அறிவியல், தரவு அறிவியல் மற்றும் இயற்பியல் ஆகிய துறைகளில் இளங்கலை, முதுகலை மற்றும் முனைவர் பட்டப் படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.

இளங்கலை படிப்புகளுக்கு பிளஸ் டூ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். முதுகலை படிப்புகளுக்கு சம்மந்தப்பட்ட துறையில் இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். முனைவர் பட்டப் படிப்புகளுக்கு முதுகலைப் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

தேசிய அறிவியல் ஒலிம்பியாட் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு எழுத்துப்பூர்வ நுழைவுத் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.இப்படிப்புகள் குறித்த முழுமையான விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்கும் முறைகளை அறிய www.cmi.ac.in/admissions என்ற அதிகாரப்பூர்வ இணையதள முகவரியைப் பார்வையிடலாம்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Dinamaalai