Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
ஸ்கூட்டரில் சென்ற போதே மாரடைப்பால் உயிரிழந்த வழக்கறிஞர்... நெஞ்சை பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள்!

ஸ்கூட்டரில் சென்ற போதே மாரடைப்பால் உயிரிழந்த வழக்கறிஞர்... நெஞ்சை பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள்!

காராஷ்டிரா மாநிலம் பிவாண்டி பகுதியைச் சேர்ந்த 42 வயதான வழக்கறிஞரும் மாணவர் சங்கத் தலைவருமான நிதின் ஸ்ரீபத் தாம்பே ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதன் காரணமாக அவர் நடுரோட்டிலேயே நிலைதடுமாறிச் சரிந்து விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். அவர் வாகனத்தை ஓட்டியபடியே திடீரெனத் கீழே விழுந்து உயிரிழந்த இந்த நெஞ்சைப் பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளன. இளம் வயதில் வழக்கறிஞர் ஒருவர் நடுரோட்டில் மாரடைப்பால் உயிரிழந்த இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வழக்கறிஞர் நிதின் ஸ்ரீபத் தாம்பே வழக்கம் போல் தனது ஸ்கூட்டரில் எவ்விதப் பிரச்சினையுமின்றிப் பயணத்தை மேற்கொண்டதாகக் கூறப்படுகிறது. பயணம் செய்து கொண்டிருந்த அந்தத் தருணத்தில் அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உடலின் இயக்கம் முழுமையாக நின்றுள்ளது. இதனால் வாகனத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் அவர் அப்படியே சாலையின் நடுவே மயங்கிச் சரிந்து விழுந்துள்ளார். அருகில் இருந்தவர்கள் உடனடியாக அவரை மீட்க முயன்ற போதிலும் அதற்குள் உயிர் பிரிந்தது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

சம்பவ இடத்திற்கு அருகில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான இந்த அதிர்ச்சித் காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகின்றன. மாணவர் சங்கத் தலைவராகவும் சமூகப் பணிகளிலும் தீவிரமாக ஈடுபட்டு வந்த இவரது திடீர் மறைவு நண்பர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாளுக்கு நாள் இளம் வயதிலேயே மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது பொதுமக்களிடையே அச்சத்தை உருவாக்கியுள்ளது. மாரடைப்பு போன்ற ஆபத்தான நோய்கள் குறித்து அனைவரும் தங்களது உடல்நலனைத் தொடர் பரிசோதனைகள் மூலம் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Dinamaalai