Dailyhunt
"சூப்பர்ஸ்டாரு யாருன்னு கேட்டா.." - மேடையில் திடீரென ரஜினி பாட்டைப் பாடிய முதல்வர் ஸ்டாலின்!

"சூப்பர்ஸ்டாரு யாருன்னு கேட்டா.." - மேடையில் திடீரென ரஜினி பாட்டைப் பாடிய முதல்வர் ஸ்டாலின்!

மிழகச் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு நெல்லையில் நடைபெற்ற பிரம்மாண்டப் பொதுக்கூட்டத்தில் திமுக வேட்பாளர்களை ஆதரித்துப் பேசினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

வழக்கமான அரசியல் விமர்சனங்களுக்கு இடையே, ரஜினிகாந்த் படப் பாடலைப் பாடி அவர் கொடுத்த 'சர்ப்ரைஸ்' சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

"கடந்த முறை எங்கள் தேர்தல் அறிக்கை 'ஹீரோ'வாக இருந்தது. ஆனால், இந்த 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான திமுக-வின் அறிக்கை ஒரு 'சூப்பர்ஸ்டார்'" என்று அறிவித்தார்.

"களத்தில் இருப்பது யாரு? சூப்பர்ஸ்டார்... சூப்பர்ஸ்டாரு யாருன்னு கேட்டா, சின்னக் குழந்தையும் சொல்லும்... அது திமுக-வின் தேர்தல் அறிக்கைதான்!" என்று ரஜினியின் 'பாட்ஷா' படப் பாடலின் மெட்டில் பாடினார். இதைக் கேட்ட தொண்டர்கள் கரவொலி எழுப்பி ஆர்ப்பரித்தனர்.

"நான் சொல்லாததையும் செய்வேன்; ஆனால் எடப்பாடி பழனிசாமி சொன்னதையும் செய்ய மாட்டார். அவருக்குச் சொந்தமாகச் செயல்படும் திறனும் கிடையாது" என்று விமர்சித்தார். ஏற்கனவே பல தேர்தல்களில் தோற்றுள்ள அதிமுக-விற்கு, இந்தத் தேர்தலில் 11-வது தோல்வி காத்திருப்பதாக முதல்வர் ஸ்டாலின் கிண்டலடித்தார்.

இபிஎஸ் பாஜக-வின் நிழலில் இயங்குவதாகவும், தமிழக மக்களின் நலனை அவர் அடகு வைத்துவிட்டதாகவும் குற்றம் சாட்டினார். நெல்லை மற்றும் தென்காசி மாவட்ட திமுக வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்து முதல்வர் ஆற்றிய இந்தப் பேச்சு, தென் மாவட்டங்களில் திமுக-வின் தேர்தல் ஜுரத்தை அதிகப்படுத்தியுள்ளது. குறிப்பாக, ரஜினி பாடலைப் பயன்படுத்தியது இளைஞர்கள் மற்றும் சினிமா ரசிகர்களைக் கவரும் யுக்தியாகப் பார்க்கப்படுகிறது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Dinamaalai