Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
தபால் துறையில் 2,095 கிராம அஞ்சல் பணியிடங்கள்.. முழு விபரம்!

தபால் துறையில் 2,095 கிராம அஞ்சல் பணியிடங்கள்.. முழு விபரம்!

ந்திய அஞ்சல் துறையில் நாடு முழுவதும் கிராமின் தாக் சேவக் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதில் தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு அஞ்சல் கோட்டங்களுக்கு உட்பட்ட காலியிட விவரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

தமிழ்நாட்டில் கிளை அஞ்சல் தலைவர், உதவி கிளை அஞ்சல் தலைவர் மற்றும் சேவக் ஆகிய பதவிகளுக்கு மொத்தம் 2,095 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி வாரியத்தில் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் உள்ளூர் மொழியறிவு, கணினிப் பயன்பாடு மற்றும் சைக்கிள் ஓட்டத் தெரிந்திருக்க வேண்டியது அவசியமாகும். விண்ணப்பதாரர்கள் 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும், 40 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி குறிப்பிட்ட பிரிவினருக்கு வயது வரதில் தளர்வு உண்டு. எந்தவித எழுத்துத் தேர்வும் இன்றி, 10-ம் வகுப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்படுவர்.

விருப்பமுள்ள தகுதியானவர்கள் indiapost.gov.in அல்லது indiapostgdsonline.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதள முகவரி மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். ஒருமுறை பதிவு செய்தல் 31.08.2026 முதல் 19.09.2026 வரை மேற்கொள்ளலாம். ஆன்லைன் விண்ணப்பப் பதிவு 02.09.2026 முதல் 21.09.2026-க்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Dinamaalai