Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
தலையில் அரிவாளுடன் மருத்துவமனைக்கு வந்த நபர் ... பகீர் வீடியோ!

தலையில் அரிவாளுடன் மருத்துவமனைக்கு வந்த நபர் ... பகீர் வீடியோ!

மும்பை சீயோன் மருத்துவமனைக்கு நபர் ஒருவர் தனது மண்டை ஓட்டில் அரிவாள் ஆழமாகப் பதிந்த நிலையில், எவ்வித பதற்றமும் இன்றி சுயமாக நடந்து வந்து சிகிச்சை கோரியது அங்கிருந்தவர்களை உறைந்து போகச் செய்துள்ளது.

இதைப் பார்த்த மருத்துவர்கள் தொடக்கத்தில் கடும் அதிர்ச்சியடைந்த போதிலும், உடனடியாக அவருக்கு முதலுதவி சிகிச்சைகளைத் தொடங்கினர். மிகக் கடுமையான காயத்துடன் அவர் சுயமாக நடந்து வந்தது மட்டுமன்றி, முழு சுயநினைவுடன் இருந்தது மருத்துவ ரீதியாக ஒரு பெரும் வியப்பாகப் பார்க்கப்படுகிறது.

இந்தக் கொடூரத் தாக்குதல் குறித்து போலீஸார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், குடும்பத் தகராறு அல்லது தனிப்பட்ட முன்விரோதம் காரணமாக அரிவாள் வெட்டு விழுந்திருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது. தாக்குதலுக்கு உள்ளான அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து வந்துள்ளனர். தற்போது அவருக்கு அவசர அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, அவர் மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் உள்ளார். அரிவாளுடன் அவர் நடந்து வரும் காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக மும்பை காவல்துறை வழக்குப் பதிவு செய்து, தாக்குதலில் ஈடுபட்ட மர்ம நபர்களைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் இத்தகைய பயங்கரத் தாக்குதல் அரங்கேறியுள்ளது பொதுமக்களிடையே அச்சத்தை உருவாக்கியுள்ளது. இந்தச் சம்பவம் மும்பை நகரின் சட்டம் ஒழுங்கு நிலை குறித்து மீண்டும் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளதோடு, பாதுகாப்பு ஏற்பாடுகளைத் தீவிரப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையையும் வலுப்படுத்தியுள்ளது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Dinamaalai