Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளில் கிலோ ரூ35/-க்கு வெங்காயம் விற்பனை!

தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளில் கிலோ ரூ35/-க்கு வெங்காயம் விற்பனை!

மிழகம் முழுவதும் உள்ள ரேஷன் கடைகளில் ஒரு கிலோ வெங்காயத்தை 35 ரூபாய்க்கு விற்பனை செய்யும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

சமையலில் அத்தியாவசியப் பொருளாகப் பயன்படுத்தப்படும் வெங்காயத்தின் விலை கடந்த சில வாரங்களாகத் தொடர்ந்து அதிகரித்து வந்ததால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வந்தனர்.

வெங்காயத்தின் விலை உயர்வை எளிய மக்களிடம் இருந்து கட்டுப்படுத்தும் நோக்கில் மத்திய அரசின் மூலம் மாநிலங்களுக்குக் கொண்டுவரப்பட்டு இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாகச் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள நியாயவிலைக் கடையில் குடும்ப அட்டைதாரர்களுக்குக் குறைந்த விலையில் வெங்காயம் விற்பனை செய்யும் திட்டத்தை அமைச்சர்கள் வெங்கடரமணன் மற்றும் காந்திராஜ் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைத்தனர்.

வெளிச்சந்தையில் வெங்காயத்தின் விலை கணிசமாக உயர்ந்துள்ள நிலையில், நியாயவிலைக் கடைகளில் குறைந்த விலையில் இது கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது பொதுமக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்தத் திட்டத்தின் மூலம் ஏழை மற்றும் நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த மக்கள் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Dinamaalai