Dailyhunt
தங்கம் விலை அதிரடி சரிவு... ஒரே நாளில் சவரனுக்கு ரூ.2,400 குறைவு!

தங்கம் விலை அதிரடி சரிவு... ஒரே நாளில் சவரனுக்கு ரூ.2,400 குறைவு!

மிழகத்தில் தங்கத்தின் விலை இன்று (ஏப்ரல் 02) யாரும் எதிர்பார்க்காத வகையில் இரண்டாவது முறையாகப் பெருமளவு சரிவைச் சந்தித்துள்ளது.

இன்று காலையில் சவரனுக்கு ரூ.800 குறைந்த நிலையில், தற்போது மாலையில் மேலும் ரூ.1,600 குறைந்து, ஒட்டுமொத்தமாக ஒரே நாளில் சவரனுக்கு ரூ.2,400 அதிரடியாகச் சரிந்துள்ளது. இந்தத் திடீர் விலை வீழ்ச்சி நகை வாங்குவோரிடையே பெரும் உற்சாகத்தையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

விலை நிலவரத்தின்படி, இன்று காலையில் ஒரு சவரன் தங்கம் ரூ.1,11,600-க்கு விற்பனை செய்யப்பட்டது. தற்போது மேலும் சரிவடைந்து ஒரு சவரன் ரூ.1,10,000 என்ற நிலைக்கு வந்துள்ளது. அதேபோல், ஒரு கிராம் தங்கத்தின் விலை காலையில் ரூ.100 குறைந்த நிலையில், தற்போது மேலும் ரூ.200 குறைந்து ரூ.13,750-க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்று சவரன் ரூ.1,12,400 என்ற உச்சத்தில் இருந்த நிலையில், இன்று ஒரே நாளில் ஏற்பட்டுள்ள இந்த மாற்றம் சந்தையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வெள்ளி விலையைப் பொறுத்தவரை பெரிய மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.255-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.2,55,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேசச் சந்தையில் நிலவும் பொருளாதார மாற்றங்கள் மற்றும் கச்சா எண்ணெய் விலை உயர்வு உள்ளிட்ட காரணங்களால் தங்கம் விலை கடந்த சில நாட்களாக உச்சத்தில் இருந்தது. ஆனால், இன்று ஏற்பட்டுள்ள இந்த மெகா சரிவு சாமானிய மக்களுக்குப் பெரும் நிம்மதியை அளித்துள்ளது. திருமண சீசன் தொடங்கி உள்ள நிலையில், இந்த விலை குறைவு நகைக்கடைகளில் கூட்டத்தை அதிகரிக்கச் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Dinamaalai