Dailyhunt
தனிமையில் தவிக்கும் விஜய் பட நடிகை - படப்பிடிப்பு அனுபவம் குறித்துப் பகீர் பதிவு!

தனிமையில் தவிக்கும் விஜய் பட நடிகை - படப்பிடிப்பு அனுபவம் குறித்துப் பகீர் பதிவு!

மிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் மாளவிகா மோகனன், தற்போது தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் உருவாகி வரும் 'பாக்கெட் நாவல்' என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பிற்காகச் சென்னையில் தங்கியிருந்த அனுபவம் குறித்து அவர் பகிர்ந்துள்ள தகவல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சென்னையில் நடைபெற்ற நீண்ட காலப் படப்பிடிப்பு, தன்னை மனதளவில் பெரிதும் பாதித்ததாக மாளவிகா தெரிவித்துள்ளார். தனது குடும்பம் மற்றும் மும்பை வீட்டை விட்டு நீண்ட காலம் பிரிந்திருந்தது, தனக்குள் ஒருவிதத் தனிமையை உருவாக்கியதாக அவர் கூறியுள்ளார்.

"சென்னையில் இருந்தபோது தனிமையுடன் போராடினேன். அந்தத் தனிமை என்னை ஒருகட்டத்தில் நிலைகுலைய வைத்தது," என அவர் தனது பதிவில் வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார்.

படப்பிடிப்பு முடிந்ததும் உடனடியாகத் தனது சொந்த ஊரான மும்பைக்குத் திரும்பிய மாளவிகா, அங்குத் தனது மன அழுத்தத்தைக் குறைக்கப் படகு சவாரி சென்றுள்ளார். மும்பையின் கடலோரக் காற்றும், படகு சவாரியும் தனக்கு மிகுந்த மன அமைதியைக் கொடுத்ததாகக் குறிப்பிட்டுள்ள அவர், இந்த அனுபவம் மும்பை நகரின் மீது தனக்கிருந்த காதலை மேலும் அதிகரிக்கச் செய்துள்ளதாக நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.

சமீபத்தில் விக்ரமுடன் இணைந்து நடித்த 'தங்கலான்' படத்தின் தோல்வியைத் தொடர்ந்து, தற்போது தியாகராஜன் குமாரராஜா போன்ற தரமான இயக்குநர்களுடன் மாளவிகா இணைந்து வருவது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அதே சமயம், இவ்வளவு பெரிய நடிகையாக இருந்தும் அவர் தனிமை குறித்துப் பேசியிருப்பது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Dinamaalai