Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
தவெக பெரும்பான்மைக்கு முட்டுக்கட்டைப் போட்ட 12 தொகுதிகள் எவை எவை?!

தவெக பெரும்பான்மைக்கு முட்டுக்கட்டைப் போட்ட 12 தொகுதிகள் எவை எவை?!

மிழக சட்டமன்றத் தேர்தலில் 108 இடங்களைக் கைப்பற்றித் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த போதிலும், தமிழக வெற்றிக் கழகத்தால் ஆட்சியமைக்கத் தேவையான 118 இடங்களை எட்ட முடியவில்லை.

வெறும் 10 இடங்கள் கூடுதலாகக் கிடைத்திருந்தால் விஜய் எவ்விதச் சிக்கலும் இன்றி முதலமைச்சராகப் பதவியேற்றிருக்க முடியும் என்ற சூழலில், 12 தொகுதிகளில் மிகக் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தவெக வெற்றியைப் பறிகொடுத்துள்ளது. இந்தத் தொகுதிகளில் ஏற்பட்ட சிறிய பின்னடைவுதான் ஒட்டுமொத்த தேர்தல் முடிவுகளையும் மாற்றி, அக்கட்சியின் பெரும்பான்மையைத் தடுத்து நிறுத்தியுள்ளது.

குறிப்பாகத் திருக்கோவிலூர் தொகுதியில் வெறும் 285 வாக்குகள் வித்தியாசத்திலும், விக்கிரவாண்டி, குளித்தலை, பழனி, கோவில்பட்டி மற்றும் ஊட்டி ஆகிய தொகுதிகளில் ஆயிரத்திற்கும் குறைவான வாக்குகள் வித்தியாசத்திலும் தவெக தோல்வியைத் தழுவியுள்ளது. இதேபோல் திண்டுக்கல், கரூர், பாபநாசம், கிள்ளியூர், புதுக்கோட்டை மற்றும் திருமயம் ஆகிய 6 தொகுதிகளில் 2 ஆயிரத்திற்கும் குறைவான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி கைநழுவிப் போயுள்ளது. இந்த 12 தொகுதிகளில் மட்டும் தவெக வெற்றி பெற்றிருந்தால், அக்கட்சிக்கு 120 இடங்களுடன் அறுதிப் பெரும்பான்மை கிடைத்திருக்கும்.

இது தவிர திருவண்ணாமலை, ஏற்காடு, விருத்தாசலம், கோவை தெற்கு மற்றும் கீழ்வேளூர் ஆகிய 5 தொகுதிகளில் 2,500 வாக்குகள் என்ற அளவிலேயே தோல்வி ஏற்பட்டுள்ளது. மிகக் குறுகிய வாக்கு வித்தியாசத்தில் இத்தனை தொகுதிகளை இழந்தது அக்கட்சித் தொண்டர்களிடையே பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒருவேளை இந்த 12 தொகுதிகளில் கூடுதல் கவனம் செலுத்தியிருந்தால், தமிழக அரசியல் வரலாறே இன்று மாறியிருக்கும் என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். தவெக தலைமை தற்போது இந்தத் தொகுதிகளில் ஏற்பட்ட தோல்விக்கான காரணங்கள் குறித்துத் தீவிரமாக ஆராய்ந்து வருகிறது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Dinamaalai