Dailyhunt
தவெக தொடர் முன்னிலை... 3 வது இடத்தில் திணறும் திமுக!

தவெக தொடர் முன்னிலை... 3 வது இடத்தில் திணறும் திமுக!

மிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை முதல் பலத்த பாதுகாப்புடன் நடைபெற்று வருகிறது.

தேர்தல் ஆணையம் தற்போது வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி அரசியல் களத்தில் யாரும் எதிர்பாராத திருப்பங்கள் அரங்கேறி வருகின்றன. குறிப்பாக புதிய கட்சியான தமிழக வெற்றிக் கழகம் மற்றும் பிரதான எதிர்க்கட்சியான அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளுமே சமபலத்துடன் தலா 33 தொகுதிகளில் முன்னிலை பெற்று மல்லுக்கட்டி வருகின்றன.

ஆளுங்கட்சியான திமுக தற்போதைய நிலவரப்படி வெறும் 16 தொகுதிகளில் மட்டுமே முன்னிலை பெற்று மூன்றாவது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது. இந்த ஆரம்பக்கட்ட முன்னணி நிலவரங்கள் ஆளுங்கட்சித் தொண்டர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. மற்ற கட்சிகளைப் பொறுத்தவரை காங்கிரஸ் 2 தொகுதிகளிலும், பாஜக, பாமக, சிபிஐ, அமமுக மற்றும் தேமுதிக ஆகிய கட்சிகள் தலா 1 தொகுதியிலும் முன்னிலை பெற்று தங்களது இருப்பைப் பதிவு செய்துள்ளன.

வாக்கு எண்ணும் மையங்களில் மின்னணு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் தொடர்ந்து எண்ணப்பட்டு வருவதால் முன்னணி நிலவரங்கள் நொடிக்கு நொடி மாறி வருகின்றன. தவெக மற்றும் அதிமுக இடையே நிலவும் இந்த நேரடிப் போட்டி தமிழக அரசியலில் ஒரு புதிய மாற்றத்திற்கான அறிகுறியாகவே பார்க்கப்படுகிறது. இன்று மாலைக்குள் அனைத்து தொகுதிகளின் முழுமையான முடிவுகள் வெளியாகும் போது தமிழகத்தின் அடுத்த புதிய ஆட்சியாளர்கள் யார் என்பது அதிகாரப்பூர்வமாகத் தெரிந்துவிடும்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Dinamaalai