Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
"தவெகவில் என்னையும் சேர்த்துக்கோங்க" ... நடிகை விஜயலட்சுமி உருக்கமான வேண்டுகோள்!

"தவெகவில் என்னையும் சேர்த்துக்கோங்க" ... நடிகை விஜயலட்சுமி உருக்கமான வேண்டுகோள்!

மிழக சட்டமன்றத் தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்க்கு, திரையுலகினர் பலரும் தொடர்ந்து வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில், நடிகை விஜயலட்சுமி விஜய்யின் இந்த மாபெரும் வெற்றியைப் பாராட்டி சமூக வலைதளத்தில் ஒரு புதிய வீடியோவைப் பகிர்ந்துள்ளார். அதில் விஜய்யின் அரசியல் எழுச்சி தமிழகத்தில் ஒரு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளதாக அவர் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.

விஜய்யை "அண்ணா" என்று விளித்து வாழ்த்து தெரிவித்துள்ள அவர், "மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ள விஜய் அண்ணாவிற்கும், தவெக நிர்வாகிகள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள்" என்று கூறியுள்ளார். மேலும், தான் தற்போது சென்னையில் இல்லாதது குறித்து வருத்தம் தெரிவித்த அவர், "நான் மட்டும் இப்போது சென்னையில் இருந்திருந்தால், நேரில் சென்று அண்ணாவைச் சந்தித்து வாழ்த்து கூறியிருப்பேன்" என்று தனது விருப்பத்தை அந்த வீடியோவில் வெளிப்படுத்தியுள்ளார்.

வாழ்த்துக்களோடு நிறுத்திக்கொள்ளாமல், தனது அரசியல் விருப்பத்தையும் விஜயலட்சுமி ஓப்பனாகத் தெரிவித்துள்ளார். "விஜய் அண்ணாவை நேரில் சந்திக்கும்போது, என்னையும் உங்கள் தவெக கட்சியில் சேர்த்துக்கோங்க என்று கேட்டிருப்பேன்" என அவர் கூறியுள்ளார். நடிகை விஜயலட்சுமியின் இந்த வீடியோ மற்றும் தவெக-வில் இணைய அவர் காட்டியுள்ள ஆர்வம் தற்போது இணையதளங்களில் விஜய் ரசிகர்களிடையே மிக வேகமாகப் பகிரப்பட்டு வருகிறது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Dinamaalai