Dailyhunt
தேர் சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி... பிரபல கோவில் தேரோட்டத்தில் பெரும் சோகம்!

தேர் சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி... பிரபல கோவில் தேரோட்டத்தில் பெரும் சோகம்!

ண்ணடி லிங்கிசெட்டி தெருவில் உள்ள பழமையான மல்லிகேஸ்வரர் கோவில் தேரோட்டம் கடந்த மாதம் 29-ம் தேதி நடைபெற்றது.

இந்த விழாவின் போது தேரை நிறுத்துவதற்காக சக்கரத்தின் அடியில் மரக்கட்டை வைக்கும் பணியில் புது தெருவை சேர்ந்த 24 வயது இளைஞர் குபேந்திரன் ஈடுபட்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக தடுமாறி கீழே விழுந்த அவர் பிரம்மாண்ட தேர் சக்கரத்தில் சிக்கி படுகாயமடைந்தார்.

இரத்த வெள்ளத்தில் துடித்த குபேந்திரனை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த துயர சம்பவம் திருவிழாவிற்கு வந்திருந்த பக்தர்கள் மற்றும் அந்த பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

தகவலறிந்த காவல்துறையினர் விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆன்மீக விழாவில் பாதுகாப்பு குறைபாடுகள் இருந்ததா அல்லது எதிர்பாராத விபத்தா என்ற கோணத்தில் அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். பலியான இளைஞரின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் மல்லிகேஸ்வரர் கோவில் முன்பாக திரண்டதால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Dinamaalai