Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
திபெத்தில் பெருவெள்ளம்...நேபாளத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 500-ஐ தாண்டியது!

திபெத்தில் பெருவெள்ளம்...நேபாளத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 500-ஐ தாண்டியது!

திபெத்தின் லெண்டே நதியில் உருவான பெருவெள்ளம் நேபாளத்தை உலுக்கியதில், உயிரிழந்தோர் எண்ணிக்கை 500-ஐ கடந்துள்ளது.

ரசுவா, நுவாகோட் உள்ளிட்ட மாவட்டங்களில் ராணுவம் மீட்புப் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. பேரிடரால் பாதிக்கப்பட்டுள்ள இந்தப் பகுதிகளில் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டு வருகின்றனர்.

இதனிடையே, கைலாஷ் மானசரோவர் சென்ற 288 இந்தியர்கள் உட்பட 1,000-க்கும் மேற்பட்டோர் மாயமாகியுள்ளனர். திடீரென ஏற்பட்ட இந்த பேராபத்தினால் அப்பகுதியிலுள்ள முக்கியச் சாலைகள் மற்றும் பாலங்கள் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாகப் பாதிக்கப்பட்டு, பலரும் உணவு மற்றும் நீரின்றித் தவித்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தகவல் தொடர்பு முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளதால் அவர்களை மீட்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மீட்புக் குழுவினரும் ராணுவத்தினரும் இணைந்து காணாமல் போனவர்களைத் தேடும் பணிகளை முடுக்கிவிட்டுள்ளனர். இந்தத் திடீர் இயற்கை பேரிடர் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Dinamaalai