Dailyhunt
திடீர் புழுதிப்புயல் ... தலைநகரில் மக்கள் கடும் அவதி!

திடீர் புழுதிப்புயல் ... தலைநகரில் மக்கள் கடும் அவதி!

லைநகர் டெல்லியில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில், நேற்று மாலை திடீரென வானிலை மாறியது.

எதிர்பாராத விதமாக பலத்த காற்றுடன் கூடிய புழுதிப்புயல் வீசியதால் ஒட்டுமொத்த நகரமும் தூசி மண்டலமாகக் காட்சியளித்தது. இந்த திடீர் மாற்றத்தால் சாலைகளில் சென்ற வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர்.

புழுதிப்புயல் காரணமாக பார்வைத்திறன் வெகுவாகக் குறைந்ததால், சாலையில் சென்ற இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் முகப்பு விளக்குகளை ஒளிரவிட்டபடி மெதுவாகச் சென்றன. பல இடங்களில் பலத்த காற்றினால் மரங்கள் முறிந்து விழுந்தன, இதனால் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. புழுதிப்புயலைத் தொடர்ந்து ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்ததால் வெப்பம் சற்று தணிந்தது.

வானிலை ஆய்வு மையம் இது குறித்து முன்னரே எச்சரிக்கை விடுத்திருந்தாலும், புயலின் வேகம் மக்களை நிலைதடுமாறச் செய்தது. வரும் நாட்களில் மேலும் சில இடங்களிலும் இத்தகைய வானிலை மாற்றம் இருக்கக்கூடும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மக்கள் தேவையின்றி வெளியே வருவதைத் தவிர்க்குமாறும், பாதுகாப்பான இடங்களில் இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Dinamaalai