Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
திரைப்பட சென்சார் போர்டு அதிகாரியாக சஞ்சய் கோஷ் நியமனம்!

திரைப்பட சென்சார் போர்டு அதிகாரியாக சஞ்சய் கோஷ் நியமனம்!

சென்னை மத்திய திரைப்பட சான்றளிப்பு வாரியத்தின் புதிய மண்டல அதிகாரியாக சஞ்சய் கோஷ் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதற்கான அதிகாரப்பூர்வ உத்தரவை மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

இந்திய தகவல் சேவைப் பிரிவை சேர்ந்த மூத்த அதிகாரியான சஞ்சய் கோஷ், தற்போது சென்னை புத்தக வெளியீட்டுப் பிரிவின் துணை இயக்குநராகப் பணியாற்றி வருகிறார். மேலும், இவர் டெல்லி புத்தக வெளியீட்டுப் பிரிவின் நிர்வாகக் கட்டுப்பாட்டின் கீழ், சென்னை பத்திரிகை தகவல் அலுவலகத்தின் கூடுதல் பொறுப்பையும் கவனித்து வருகிறார்.

தற்போது வகித்து வரும் பொறுப்புகளுடன் சேர்த்து, சென்னை மத்திய திரைப்பட சான்றளிப்பு வாரியத்தின் மண்டல அதிகாரி பொறுப்பையும் அவர் கூடுதலாகக் கவனிப்பார் என அமைச்சகம் வெளியிட்டுள்ள உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Dinamaalai