Dailyhunt
உஷார்.. தமிழகத்தில் இன்று 5 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை!

உஷார்.. தமிழகத்தில் இன்று 5 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை!

மிழகத்தில் வளிமண்டலக் கீழடுக்குச் சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக, இன்று பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், 5 மாவட்டங்களில் கனமழைக்கும் வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியை ஒட்டியுள்ள மாவட்டங்களில் மழையின் தாக்கம் சற்று அதிகமாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஈரோடு, நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் ஆகிய 5 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

இன்றைய மழையைத் தொடர்ந்து, வரும் ஏப்ரல் 7-ம் தேதி (நாளை மறுநாள்) தென் தமிழக மாவட்டங்களில் மழையின் தீவிரம் அதிகரிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. மதுரை, சிவகங்கை, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் நாளை மறுநாள் பலத்த மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

மழை பெய்யும் நேரங்களில் மணிக்கு 30 முதல் 40 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால், இடி மின்னல் நிலவும் போது மரங்களின் அடியிலோ அல்லது மின் கம்பங்களுக்கு அருகிலோ நிற்க வேண்டாம் எனப் பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்களைத் தவிர்த்து, ஏனைய மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலையானது இயல்பை விட 2-4 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாகவே இருக்கும். குறிப்பாகச் சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டாலும், வெயிலின் தாக்கம் மதிய நேரங்களில் அதிகமாக இருக்கும்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Dinamaalai