Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
வெள்ளிக்கிழமையில் இன்ப அதிர்ச்சி... தங்கம் விலை அதிரடி சரிவு!

வெள்ளிக்கிழமையில் இன்ப அதிர்ச்சி... தங்கம் விலை அதிரடி சரிவு!

சென்னையில் தங்கம் விலை தொடர்ந்து குறைந்து வருகிறது. கடந்த 20-ம் தேதி முதல் இறங்குமுகத்தில் உள்ள தங்கம் விலை, இன்று மேலும் சரிந்துள்ளது.

சவரனுக்கு ரூ.1,400 குறைவு

சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.1,400 குறைந்து ரூ.1,04,480-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.175 குறைந்து ரூ.13,060 ஆக உள்ளது. நேற்று சவரனுக்கு ரூ.1,240 குறைந்து ரூ.1,05,880-க்கும், கிராமுக்கு ரூ.155 குறைந்து ரூ.13,235-க்கும் விற்பனையானது. கடந்த 4 நாட்களில் மட்டும் சவரனுக்கு ரூ.4,080 குறைந்துள்ளது.

வெள்ளி விலையில் மாற்றமில்லை

வெள்ளி விலையில் இன்று மாற்றமில்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.225-க்கும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 25 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Dinamaalai