Dailyhunt
விஜய்யின் பிராமண பத்திரத்தை 3.20 லட்சம் பேர் பதிவிறக்கம்... இணையத்தை அதிரவைக்கும் தளபதி!

விஜய்யின் பிராமண பத்திரத்தை 3.20 லட்சம் பேர் பதிவிறக்கம்... இணையத்தை அதிரவைக்கும் தளபதி!

மிழக சட்டசபை தேர்தல் களம் தற்போது அனல் பறக்கத் தொடங்கியுள்ள நிலையில் வேட்பாளர்கள் தாக்கல் செய்துள்ள சொத்து விவரங்களை அறிந்துகொள்ள மக்களிடையே பெரும் ஆர்வம் ஏற்பட்டுள்ளது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள வேட்பாளர்களின் உறுதிமொழிப் பத்திரங்களைப் பார்ப்பதற்குப் போட்டி நிலவி வருகிறது. இதில் குறிப்பாகத் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் மற்றும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோரின் பின்னணி விவரங்களைத் தேடி லட்சக்கணக்கானோர் இணையதளத்தை முற்றுகையிட்டு வருகின்றனர். வேட்பாளர்களின் கல்வித் தகுதி மற்றும் குற்ற வழக்குகள் போன்ற தகவல்கள் இதில் வெளிப்படையாக இடம்பெற்றுள்ளதால் அரசியல் வட்டாரத்தில் இது பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.

இந்தத் தேர்தலில் முதன்முறையாகக் களம் காணும் த.வெ.க தலைவர் விஜய் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறார். இவரது பிரமாணப் பத்திரத்தை மட்டும் இதுவரை சுமார் 3,20,000 பேர் பதிவிறக்கம் செய்து புதிய சாதனையைப் படைத்துள்ளனர். விஜய்யின் சொத்து மதிப்பு எவ்வளவு இருக்கும் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் மட்டுமின்றி அரசியல் ஆர்வலர்களும் அதிகளவில் ஆர்வம் காட்டி வருவதால் இணையதளத்தில் அவரது பக்கம் மட்டும் எப்போதும் பரபரப்பாகவே காணப்படுகிறது. மற்ற முன்னணி வேட்பாளர்களைக் காட்டிலும் இவரது விவரங்களை அறிந்துகொள்ளத் துடிக்கும் கூட்டமே தற்போதைய தேர்தல் களத்தின் முக்கிய திருப்பமாகப் பார்க்கப்படுகிறது.

விஜய்க்கு அடுத்தபடியாகத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் சொத்து விவரங்களைச் சுமார் 1,30,000 பேர் இணையதளத்தில் தேடிப் பதிவிறக்கம் செய்துள்ளனர். தேர்தல் களத்தில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்ய வேண்டும் என்ற நோக்கில் தேர்தல் ஆணையம் இந்தப் பட்டியலை வெளியிட்டுள்ள நிலையில் இது போன்ற புள்ளிவிவரங்கள் வேட்பாளர்களின் செல்வாக்கை அளவிடும் கருவியாக மாறியுள்ளன. மக்கள் தங்கள் வாக்குகளைச் செலுத்துவதற்கு முன்பாகத் தலைவர்களின் உண்மையான நிலையை அறிந்து கொள்ள முற்படுவதை இது காட்டுகிறது. தேர்தல் நெருங்க நெருங்க இன்னும் பல வேட்பாளர்களின் விவரங்கள் இணையத்தில் வெளியாகித் தேர்தல் திருவிழாவை மேலும் விறுவிறுப்பாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Dinamaalai