Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
விமானம் புறப்பட சில நிமிடங்கள் இருந்தபோது கடத்தல் மிரட்டல். கொல்கத்தாவில் பரபரப்பு!

விமானம் புறப்பட சில நிமிடங்கள் இருந்தபோது கடத்தல் மிரட்டல். கொல்கத்தாவில் பரபரப்பு!

மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தா விமான நிலையத்தில் இருந்து மும்பைக்குப் புறப்படத் தயாராக இருந்த ஏர் இந்தியா விமானத்தில் கடத்தல் மிரட்டல் வாசகம் கண்டுபிடிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

நவம்பர் 11-ம் தேதி காலை, கொல்கத்தாவின் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து மும்பை செல்லவிருந்த ஏர் இந்தியா விமானம் புறப்படத் தயாராக இருந்தது. அப்போது விமானத்தின் கழிவறையில் உள்ள கண்ணாடியில், விமானம் கடத்தப்படும் என எச்சரிக்கும் வாசகம் எழுதப்பட்டிருந்ததை பணியாளர்கள் கண்டறிந்தனர்.

இதுகுறித்து விமானி உடனடியாக விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் தெரிவித்தார். இதையடுத்து பாதுகாப்பு நடைமுறைகள் அமல்படுத்தப்பட்டு, விமானத்தில் இருந்த 105 பயணிகளும் கீழே இறக்கப்பட்டனர். பின்னர் விமானம் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிக்கு மாற்றப்பட்டு, சிஐஎஸ்எப் மற்றும் பாதுகாப்புப் படையினர் தீவிர சோதனை மேற்கொண்டனர்.

சோதனையில் சந்தேகத்துக்கிடமான பொருட்கள் எதுவும் கண்டறியப்படவில்லை. கடத்தல் மிரட்டல் வெறும் புரளி என அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் காலை 10.30 மணியளவில் புறப்பட வேண்டிய விமானம் தாமதமாகி, மாலை 5.38 மணிக்குப் புறப்பட்டது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Dinamaalai